மண்சுவர் இடிந்து சிறுவனின் கால் முறிந்தது
மண்சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவனின் கால் முறிந்தது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியகல்லேரி கிராமம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மகன் ஆல்பன் அருள்(வயது 10), ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். மண் சுவரில் ஆஸ்பெட்டாஸ் ஷீட் மேற்கூரை கொண்ட வீட்டில் ஆரோக்கியசாமி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் மழையால் ஈரமாக இருந்த சுவர் திடீெரன இடிந்து, விளையாடிக்கொண்டிருந்த ஆல்பன் அருள் மீது விழுந்தது. இதில் சிறுவனின் வலது காலில் எலும்பு முறிந்தது. இதனால் மயங்கி கிடந்த ஆல்பன் அருளை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆல்பன் அருள் அனுப்பி வைக்கப்பட்டான்.
Related Tags :
Next Story