குடும்பத்தகராறில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


குடும்பத்தகராறில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 14 Nov 2021 11:08 AM IST (Updated: 14 Nov 2021 11:08 AM IST)
t-max-icont-min-icon

குடும்பத்தகராறில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை,

சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 53). ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை செல்வத்துக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த செல்வம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்துவந்த எம்.ஜி.ஆர். நகர் போலீசார் தூக்கில் தொங்கிய செல்வம் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story