முன்விரோதம் காரணமாக சிறுவனுக்கு அரிவாள் வெட்டு


முன்விரோதம் காரணமாக சிறுவனுக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 14 Nov 2021 11:15 AM IST (Updated: 14 Nov 2021 11:15 AM IST)
t-max-icont-min-icon

முன்விரோதம் காரணமாக சிறுவனை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆவடி,

சென்னை வில்லிவாக்கம் வள்ளியம்மை நகரை சேர்ந்தவர் அப்பு என்ற சந்துரு (வயது 16). இவர், திருவேற்காடு பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி உள்ளார். நேற்று மாலை இவர் தனது அக்கா மகன் ஷியாமை (3½) மொபட்டில் கடைக்கு அழைத்து சென்றுவிட்டு வீடு திரும்பினார்.

திருவேற்காடு கோலடி சாலையில் சென்றபோது அவரை வழிமறித்த 2 பேர் சந்துருவை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவரது தலை, கை, கால் ஆகிய பகுதிகளில் வெட்டு விழுந்தது. அப்போது குழந்தை ஷியாமுக்கும் தலையில் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டனர். காயம் அடைந்த சந்துரு, குழந்தை ஷியாம் இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முன்விரோதம் காரணமாக நடந்த இந்த சம்பவம் தொடர்பாக திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 2 பேரையும் தேடி வருகின்றனர்.

Next Story