கோத்தகிரியில் தேசிய நூலக வார விழா
கோத்தகிரியில் தேசிய நூலக வார விழா
கோத்தகிரி
தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை, நீலகிரி மாவட்ட நூலக ஆணைக்குழு அறிவுறுத்தலின் படி கோத்தகிரி கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நூலக வார விழா நேற்று தொடங்கியது.. இந்த விழாவையொட்டி காலை 10.30 மணிக்கு நூலகத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. தொடர்ந்து நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் கோத்தகிரியில் உள்ள குழந்தைகள் நலக் காப்பகத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டு, குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இன்று புரவலர் சேர்க்கையும், நாளை நூலக உறுப்பினர்கள் சேர்க்கையும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான களை, இலக்கிய போட்டிகள் நடைபெறுகின்றன. நாளை மறுநாள் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நூலக வார விழாவின் இறுதி நாளாள் அன்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
Related Tags :
Next Story