ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு நடந்துகொள்ள வேண்டும்


ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு நடந்துகொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 14 Nov 2021 4:02 PM IST (Updated: 14 Nov 2021 4:02 PM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு நடந்துகொள்ள வேண்டும்

கூடலூர்

ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு நடந்துகொள்ள வேண்டும் என்று பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு நடந்த பயிற்சி முகாமில் கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் பேசினார். 

கல்வி திட்டம் குறித்து பயிற்சி 

கூடலூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த பயிற்சி முகாம் கூடலூரில் நடைபெற்றது. முகாமுக்கு வீடு தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் குமார் தலைமை தாங்கினார். கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் கலந்து கொண்டு பேசினர். அப்போது அவர் கூறும்போது, வீடு தேடி கல்வி திட்டத்தை அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக நடைமுறைப்படுத்த ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்து மாணவர்களின் கல்வி நிலையில் ஏற்பட்டுள்ள இடைவெளியை குறைக்க வேண்டும். மேலும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு நடந்து கொள்வதால் தான் பல்வேறு தரப்பு மக்களும் உயர்ந்த நிலைக்கு வர முடியும். ஆசிரியர்களும் கல்வித்துறை அதிகாரிகளும் இத்திட்டத்தை மிக கவனமாக கையாண்டு அனைத்து பகுதிகளிலும் நல்ல முறையில் செயல்படுத்துவதற்கு அனைத்து வகையிலும் வருவாய்த் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் துணை நிற்பார்கள். இவ்வாறு அவர் கூறினார். 

கலை நிகழ்ச்சிகள் 

தொடர்ந்து கூடலூர் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) அய்யப்பன் மற்றும் வட்டார கல்வி அலுவலர் வெள்ளியங்கிரி ஆகியோர் திட்டம் குறித்து விளக்கி பேசினர். பயிற்சியில் சுமார் 80 தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

முன்னதாக ஆசிரியர் பயிற்றுனர் ஸ்ரீனிவாசன் அனைவரையும் வரவேற்றார்.இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து ஆசிரியர்கள் பிரமோத், ஆசிரியர் பயிற்றுனர் பரமேஸ்வரன், கருணாநிதி, சரவணன், பரமேஸ்வரன், சங்கர், மணிவாசகம் பாலன் மற்றும் அன்பு ஆகியோர் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்தனர்.முடிவில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சண்முகம் நன்றி கூறினார். தொடர்ந்து இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

கோத்தகிரி

கோத்தகிரி அருகே உள்ள அரவேனு சுற்றுவட்டார பகுதிகளான முல்லைநகர், கணுவட்டி, ராப்ராய் மற்றும் கீழ் கைத்தளா ஆகிய குக்கிராமங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து விழிப்புணர்வு களை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கைத்தளா சார்பில் அரவேனு அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியை ஜக்கனாரை ஊராட்சி மன்றத் தலைவர் சுமதி சுரேஷ் தொடங்கி வைத்தார். 

பள்ளி தலைமை ஆசிரியை ராதா அனைவரையும் வரவேற்றார். வட்டார வள மைய ரவி, ஊர்த் தலைவர் மருதை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குண்டாடா பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் பேசினார். தொடர்ந்து கலைக் குழுவினர் நாடகம், பாடல்கள், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

இதில் ஏராளமான பெற்றோர்கள், பொதுமக்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுரேஷ் நன்றி கூறினார்.

Next Story