சேறும் சகதியுமான குடிநீர் கிணறு
சேறும் சகதியுமான குடிநீர் கிணறு
பந்தலூர்
பந்தலூர் எருமாடு பகுதியில் சேறும், சகதியுமாக குடிநீர் கிணறு காணப்படுகிறது. அதனால் அந்த கிணற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
குடிநீர் தட்டுப்பாடு
பந்தலூர் தாலுக்கா எருமாடு அருகே காந்திநகர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதிக்கு குடிநீர் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி ஜே.ஜே.எம். திட்டம் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க குழாய்கள் பொருத்தப்பட்டன.
அந்த குழாய்களும் சிறிய அளவில் உள்ளன. சிமெண்டு தூண்களும் தரமாக அமைக்கப்படவில்லை. இதனால அப்பகுதி மக்களுக்கு சீராக குடிநீர் கிடைக்கவில்லை. இதன்காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
நோய் பரவும் அபாயம்
இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்குள்ள கிணற்றில் உள்ள தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்து வருகின்றனர். தற்போது அந்த கிணற்றில் மேல்மூடி இல்லை. கிணற்றை சுற்றிலும் தரைதளத்தில் உடைந்து ஓட்டைகளாக காணப்படுகிறது. அதன் வழியாக அசுத்தநீர் கிணற்றில் கலக்கிறது. இதனால் கிணற்றில் உள்ள குடிநீர் சேரும் சகதியுமாக காணப்படுகிறது. அந்த குடிநீரை பொதுமக்கள் குடிப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- எங்களுக்கு சீராக குடிநீர் வினியேகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் குடிநீருக்காக கிணற்று தண்ணீரை பயன்படுத்தி வருகிறோம்.
கிணற்றை சீரமைக்க வேண்டும்
தற்போது அந்த கிணற்றில் சாக்கடை கழிவுநீர் கலப்பதோடு, சகதியாக சிவந்த நிறத்தில் காணப்படுகிறது. மேலும், கிணற்றிற்கு மேல் மூடியும் இல்லை. இதனால் வலை விரிக்கப்பட்டுள்ளது அந்த வளையும் அறுந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. எனவே சம்பந்தபட்ட துறையினர் கிணற்றின் ஓட்டைகளையும் கிணற்றையும் சீரமைக்கவேண்டும். மேலும் மேல்மட்ட குடிநீர் தொட்டிகளை உயரமாகவும் பெரிய குடிநீர் குழாய்கள் அமைக்க சம்பந்தபட்டதுறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story