பலத்த மழையால் வீடு இடிந்து சேதம்
பலத்த மழையால் வீடு இடிந்து சேதம்
கோத்தகிரி
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சுவர்களில் ஏற்பட்ட ஈரப்பதம் காரணமாக நேற்று அதிகாலை கோத்தகிரி அருகே உள்ள பெட்டட்டி அண்ணா நகர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரராஜ், பரமேஸ்வரி (53) தம்பதியின் வீட்டு முன் பகுதி இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. வீடு இடிந்து விழுந்த சமயத்தில் பரமேஸ்வரி மற்றும் அவரது கணவர் சுந்தரராஜ் ஆகியோர் மற்றொரு அறையில் இருந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் வீடு இடிந்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு வழங்கும் நிவாரண தொகையான ரூ.4,100 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
Related Tags :
Next Story