தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்

தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்
x
தினத்தந்தி 14 Nov 2021 5:58 PM IST (Updated: 14 Nov 2021 5:58 PM IST)
t-max-icont-min-icon

தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்

தூத்துக்குடி:
தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
தாமிரபரணி
நெல்லை மாவட்டம் பாபநாசம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்து வருவதால் பாபநாசம் அணையில் இருந்து சுமார் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் ஏற்கனவே வந்து கொண்டு இருக்கும் 2 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீருடன் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் சேர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு கிராமங்களிலும், செல்போன்களில் எஸ்.எம்.எஸ். மூலமும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதே போன்று பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
அனுமதியில்லை
நேற்று காலையில் தாமிரபரணி ஆற்றில் படித்துறை உள்ள அனைத்து பகுதிகளிலும் வருவாய்த்துறை மற்றும் போலீசார் இணைந்து தடுப்புகள் வைத்து எச்சரிக்கை போர்டையும் வைத்து உள்ளனர். பொதுமக்களை ஆற்றங்கரைக்கு அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில் பாபநாசம் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று மாலை 3 மணி அளவில் மருதூர் அணைக்கட்டுக்கு வந்து சேர்ந்தது. 10.8 அடி உயர அணைக்கட்டு நிரம்பி 13 ஆயிரத்து 70 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது. 9.2 அடி உயர ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு நிரம்பி 4 ஆயிரத்து 317 கன அடி தண்ணீர் வெளியேறிக் கொண்டு இருந்தது. மாலையில் தண்ணீர் வெளியேறும் அளவு அதிகரித்தது. தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story