நிவாரண உதவி


நிவாரண உதவி
x
தினத்தந்தி 14 Nov 2021 6:36 PM IST (Updated: 14 Nov 2021 6:38 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக ஏரி, குளங்கள், ஆறுகள் நிரம்பி உள்ளது.

மேலும் கனமழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஜெயா கல்வி குழுமங்களின் தலைவர் பேராசிரியர் முனைவர் அ.கனகராஜ் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி, அவர்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். அவருடன் கல்லூரி முதல்வர் முனைவர் குகன், துணை முதல்வர் விஜயகுமார், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் முனைவர் சுதா, முனைவர் காளிராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story