வஞ்சூர் வஞ்சியம்மன் கோவிலில் புகுந்த நல்ல பாம்பு


வஞ்சூர் வஞ்சியம்மன் கோவிலில் புகுந்த நல்ல பாம்பு
x
தினத்தந்தி 14 Nov 2021 6:41 PM IST (Updated: 14 Nov 2021 6:41 PM IST)
t-max-icont-min-icon

வஞ்சியம்மன் கோவிலில் புகுந்த நல்ல பாம்பு

காட்பாடி

காட்பாடி தாலுகா வஞ்சூர் கிராமத்தில் வஞ்சியம்மன் கோவில் உள்ளது. இங்கு தினமும் அம்மனுக்கு பூஜைகள் நடந்து வருகிறது. இங்கு நேற்று காலை பூசாரி வழக்கம்போல் கோவிலை திறந்தார். அப்போது கோவில் வளாகத்தில் நல்ல பாம்பு இருந்தது. இந்தச் செய்தி அந்தப் பகுதியில் பரவியது. உடனே அந்த கிராமமக்கள் கூட்டம் கோவில் முன்பு கூடியது. கோவிலின் உள்ளே பாம்பு இருப்பதை பார்த்து மக்கள் சென்றனர். கோவில் பூசாரி பாம்புக்கு பால் வைத்தார்.
கோவிலின் உள்ளே பாம்பு புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story