தியாகதுருகம் பகுதியில் தொடர் மழையால் 3 ஆயிரம் ஏக்கர் பருத்தி பயிர் சேதம்
தியாகதுருகம் பகுதியில் தொடர் மழையால் 3 ஆயிரம் ஏக்கர் பருத்தி பயிர் சேதம் வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் பகுதியில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்ததால் பல்வேறு ஏரி, குளங்கள் நிரம்பின. மேலும் தொடர் மழையின் காரணமாக தியாகதுருகம் பகுதியில் முடியனுர், சித்தலூர், கொங்கராயபாளையம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் பருத்தி பயிரில் காய்கள் வெடிக்கும் நிலையில் காய் அழுகல் ஏற்பட்டு பயிர்கள் சேதமடைந்தன. இதை வேளாண்மை இணை இயக்குனர்(பொறுப்பு) சுந்தரம் ஆய்வு மேற்கொண்டு பருத்தி பயிரில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது பருத்தியில் காய் வெடிக்கும் நிலையில் தொடர்ந்து மழை பெய்ததால் காய் அழுகல் ஏற்பட்டதாகவும், இதனால் இனி பருத்தி செடிகளில் பருத்தி எடுக்கமுடியாத நிலை உள்ளது. எனவே பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அப்போது வேளாண்மை அலுவலர் வனிதா, துணை வேளாண்மை அலுவலர் கோபாலகிருஷ்ணன், உதவி வேளாண்மை அலுவலர்கள் வினோத் குமார், துரைராஜ் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story