கள்ளக்குறிச்சி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி சாவு


கள்ளக்குறிச்சி அருகே  அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி சாவு
x
தினத்தந்தி 14 Nov 2021 10:12 PM IST (Updated: 14 Nov 2021 10:12 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி சாவு


கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே வேங்கைவாடி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 69). விவசாயியான இவர் அதே ஊரைச் சேர்ந்த இளையராஜா என்பவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வந்தார். 

இந்த நிலையில் மாணிக்கம் நேற்று முன்தினம் மாலை வீட்டில் உள்ளவர்களிடம் வயலை பார்த்து வருவதாக கூறி சென்றவர் இரவு வெகுநேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. பின்னர் அவரது குடும்பத்தினர் நேற்று காலை வயல்வெளி பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கே அறுந்து கிடந்த மின் கம்பியில் மாணிக்கம் இறந்து கிடந்தார். அறுந்து கிடந்த மின்கம்பியை அவர் மிதித்து மின்சாரம் தாக்கி இறந்து இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story