மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி
மோட்டார் சைக்கிள் மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.
தோகைமலை
தோகைமலை அருகே உள்ள தெலுங்கபட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி தனலட்சுமி (வயது 55). இவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டிற்கு தேவையான மளிகை சாமான்கள் வாங்குவதற்கு தோகைமலை-மணப்பாறை மெயின் ரோட்டில் அண்ணாநகர் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது மணப்பாறையில் இருந்து தோகைமலை நோக்கி திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, அணியப்பூர் கிராமம் களத்துப்பட்டியை சேர்ந்த சண்முகம் (22) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் தனலட்சுமி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனலட்சுமி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தனலட்சுமி மகன் விஜயகுமார் கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் சண்முகத்தின் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story