சாலை விபத்தில் பால் வியாபாரி பலி
நொய்யல் அருகே சாலை விபத்தில் பால் வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
நொய்யல்
பால் வியாபாரி
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே வெள்ளக்கல்மேடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 56). இவர் பால் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நொய்யல் குறுக்குச்சாலைக்கு பால் வியாபாரத்திற்கு சென்று பால் விற்பனையை முடித்தார். பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் நொய்யல் -வேலாயுதம்பாளையம் நெடுஞ்சாலையில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது புங்கோடை அருகே உள்ள ஒரு தனியார்ஓட்டல் அருகே வந்துகொண்டிருந்தார்.
மோதல்
அப்போது எதிரே வேலாயுதம்பாளையத்தில் இருந்து நொய்யல் நோக்கி மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த நொய்யல் அருகே அத்திப்பாளையம் பகுதியை சேர்ந்த பெயிண்டர் அரவிந்த் (27) என்பவர், செல்வராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.
இதில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து 2 பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் செல்வராஜிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அரவிந்துக்கு லேசான காயம் ஏற்பட்டது.
பலி
இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் ஓடிவந்து ஆம்புலன்ஸ் மூலம் செல்வராஜை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு செல்வராஜை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story