மெகா முகாமில் 27 ஆயிரத்து 126 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்
கரூர் மாவட்டம் முழுவதும் நடந்த மெகா முகாமில் 27 ஆயிரத்து 126 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
கரூர்
தடுப்பூசி முகாம்
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கரூர் மாவட்டத்தில் நேற்று 8-வது முறையாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 618 மையங்களில் நடைபெற்ற இம்முகாமில் செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், சுய உதவி குழுக்கள் உள்பட 3708 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.
கரூர் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற முகாம்களில் மிககுறைந்த அளவிலானவர்களே கலந்து கொண்டு தடுப்பூசிகள் செலுத்தி ெகாண்டனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் நேற்று முதல் தவணை தடுப்பூசி 9,111 பேரும், 2-வது தவணை தடுப்பூசி 18,015 பேரும் என மொத்தம் 27,126 பேர் செலுத்தி கொண்டனர்.
நொய்யல்
நொய்யல் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஈவேரா பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி, சேமங்கி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, குளத்துப்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளி, குந்தாணி பாளையம் அரசு ஆரம்பப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளிலும், அரசு அலுவலகங்களிலும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தலைமையில் சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் முகாமில் கலந்துகொண்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர்.
வேலாயுதம்பாளையம்
ேலாயுதம்பாளையம் காந்தி மண்டபம், விவசாய அலுவலகம், அரசு மருத்துவமனை, புகழூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, தோட்டக்குறிச்சி, ஆரம்ப சுகாதாரநிலையம், அய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று காலை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு முதல் மற்றும் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
Related Tags :
Next Story