திருமயம் அருகே தனியார் வங்கி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை


திருமயம் அருகே  தனியார் வங்கி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 14 Nov 2021 11:35 PM IST (Updated: 14 Nov 2021 11:35 PM IST)
t-max-icont-min-icon

திருமயம் அருகே தனியார் வங்கி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருமயம்:
தற்கொலை 
புதுக்கோட்டை வசந்தம் நகரை சேர்ந்தவர் பவானி ராஜ் (வயது 35). இவர், 
திருமயம் அருகே உள்ள குருவி கொண்டான் பட்டியில் உள்ள தனியார் வங்கியின் கிளை மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பின்னர் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்த பவானி ராஜ், குருவி கொட்டாம்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் காணப்பட்ட அவர் தன் தங்கியிருந்த வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
விசாரணை 
இதுகுறித்து தகவலறிந்த பனையப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story