பெரம்பலூரில் 2-வது நாளாக பாதிப்பு இல்லை


பெரம்பலூரில் 2-வது நாளாக பாதிப்பு இல்லை
x
தினத்தந்தி 14 Nov 2021 11:48 PM IST (Updated: 14 Nov 2021 11:48 PM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் 2-வது நாளாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை.

பெரம்பலூர்,
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 3 பேர் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 20 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 35 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 229 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 139 பேருக்கும் இன்னும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.

Next Story