மகளிர் குழுவிற்கு ரூ.488 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம்-கலெக்டர் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் நடப்பாண்டில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.488 கோடி கடனுதவி வழங்க இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறினார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் நடப்பாண்டில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.488 கோடி கடனுதவி வழங்க இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறினார்.
வேலை வாய்ப்பு முகாம்
சிவகங்கை மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் தனியார் வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி (மானாமதுரை ), மாங்குடி(காரைக்குடி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட திட்ட இயக்குனர் வானதி வரவேற்று பேசினார்.
வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்து கலெக்டர் பேசியதாவது.:-
முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க, படித்த இளைஞர்களுக்கு கல்வித்திறனுக்கேற்ப வேலைவாய்ப்புக்களை உருவாக்கித்தந்திடும் வகையில் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. மேலும், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திட்டத்தின் மூலம் நகர்ப்புறத்திற்கு இணையாக கிராமப்பகுதிகளிலும் மகளிர் முன்னேற்றம் பெற சுயஉதவிக்குழுக்கள் அமைத்து அவர்களுக்கு பொருளாதார கடனுதவி வழங்கப்படுகிறது.
ரூ.488 கோடி கடனுதவி
நடப்பாண்டிற்கு கடனுதவி வழங்க ரூ.488 கோடி இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை ரூ.230 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மீதமுள்ள தொகை விரைவில் வங்கிகள் மூலம் வழங்கப்படும். இதனால் கிராமபகுதிகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும். மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. கேட்டு கொண்டபடி தற்போது நடைபெறும் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாமைப் போல் அனைத்து ஊராட்சி ஒன்றிய அளவிலும் இதே முன்னணி நிறுவனங்களை வரவழைத்து வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் முகாமில் பணிநியமனத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் வழங்கினார். விழாவில் காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி திட்ட அலுவலர் விஷ்ணுபரன், நன்றி கூறினார்.
நேற்று நடைபெற்ற முகாமில் 39 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்ட தங்களுக்கு ேதவையான ஆட்களை தேர்வு செய்தனர் இந்த முகாமில் 1,775 பேர் கலந்து கொண்டனர்.இவர்களில் 658 பேர் வேலைநியமனம் பெற்றனர்.
Related Tags :
Next Story