தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பேரையூர் ஊராட்சிக்குட்பட்ட மங்களமேடு கிராமத்தில் 3-வது வார்டில் உள்ள வீதியில் வடிகால் வசதி இன்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. இதில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மணிகண்டன், மங்களமேடு, பெரம்பலூர்.
இதேபோல் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், சிறுமத்தூர் குடிக்காடு கிராமம் வடக்கு தெருவில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக அமைக்கப்பட்ட கால்வாய் சரியான முறையில் அமைக்கப்படாததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சிவராமன், சிறுமத்தூர் குடிக்காடு, பெரம்பலூர்.
பஸ் வசதி வேண்டும்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் பழைய விராலிப்பட்டி மற்றும் புது விராலிப்பட்டி கிராமத்தில் இருந்து செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் போதிய பஸ் வசதி இல்லாத காரணத்தால் மாணவ- மாணவிகள் சைக்கிள், நடைபயணம், லிப்ட் கேட்டு பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். மழைக்காலங்களில் பள்ளிக்கு வருவது சிரமமாக உள்ளது. ஆகையால் பெரம்பலூரில் இருந்து குரூர் கிராமத்திற்கு வந்து செல்லும் 7- C நகர பஸ்சை பழைய விராலிப்பட்டி கிராமம் வரைக்கும் காலையில் மட்டும் வந்து சென்றால் மாணவ- மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், புது விராலிப்பட்டி, பெரம்பலூர்.
தார் சாலை அமைக்கப்படுமா?
புதுக்கோட்டை நகரப்பகுதிகளில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக நிறைய தார் சாலை அமைக்கப்பட்டது. பூங்கா நகர் மேற்கு பகுதியில் ஸ்டேட் பேங்க் பின்புறம் 3 வீதிகளில் தார்சாலை அமைக்கப்படவில்லை. தற்போது மழை காலமாக இருப்பதால் சேறும், சகதியுமாக உள்ளது. எனவே இந்த 3 வீதிகளில் உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்றிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பூங்கா நகர், புதுக்கோட்டை.
சேறும், சகதியுமான சாலை
திருச்சி மாவட்டம் 37-வது வார்டுக்கு உட்பட்ட சந்தோஷ் நகரில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியால் சாலைகள் சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால் மழை காலத்தில் முதியோர்கள் , மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்பவர்கள் என அனைவருக்கும் மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், சந்தோஷ் நகர், திருச்சி.
இதேபோல் அரியலூர் வட்டம், வாலாஜா நகரம் பஞ்சாயத்துக்குட்பட்ட ஹவுசிங் போர்டு ராஜிவ் நகரில் உள்ள சாலை சேறும், சகதியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொதுமக்கள், குழந்தைகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அன்பழகன், ராஜிவ் நகர், அரியலூர்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களால் குழந்தைகள் அச்சம்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான பஸ் நிறுத்தம் உள்கடைவீதி, கச்சேரி வீதி, பெரியகடைவீதி, நகைக்கடை பஜார் ஆகிய பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்ட பலர் சுற்றித்திரிந்து வருகின்றனர். இவர்கள் அவ்வப்போது தகாத வார்த்தைகளால் பேசுவதும், அரை நிர்வாணத்துடன் செல்வதுமாக உள்ளனர். இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், பெண்கள் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கும்பேசேகரன், கறம்பக்குடி, புதுக்கோட்டை.
கொசு மருந்து அடிக்க கோரிக்கை
குளித்தலை நகர மற்றும் கிராம பகுதிகளில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தினால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கின்றன. இதனால் கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொசுத் தொல்லையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கக்கூடிய சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே அனைத்து பகுதியிலும் கொசுக்கள் உற்பத்தி ஆவதை தடுக்கும் வகையில் கொசுமருந்து அடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
குமரன், குளித்தலை, கரூர்.
கேட்பாரற்று கிடக்கும் பேட்டரி வண்டிகள்
திருச்சி பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் பல லட்சம் மதிப்புள்ள 8 பேட்டரி வண்டிகள் கடந்த 2 ஆண்டுகளாக கேட்பாரற்று அய்யன் வாய்க்கால் அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. இவை பழுதடைவதற்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பிச்சாண்டார்கோவில், திருச்சி.
வீடுகளுக்குள் மழைநீர் புகும் அவலம்
திருச்சி மாவட்டம், தென்னூர் இனாம்தார்தோப்பு பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர்செல்லும் வகையில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால் மண்ணைகொட்டி அடைக்கப்பட்டுள்ளதால் கழிவுநீர் செல்லவும், மழைநீர் செல்லவும் வழியின்றி மழைபெய்யும்போது அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துவிடுகிறது. மேலும் கழிவுநீர் தேங்கிநிற்பதினால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் அதில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதால் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. எனவே கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனகேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள் , தென்னூர், திருச்சி.
ஆற்றுப்பலாம் அமைக்கப்படுமா?
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், பெருவளப்பூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான மாயானம் ஆத்துக்கு ஆந்தபுறம் உள்ளது. ஆனால் மயனத்திற்கு போக பாலம் அமைக்கப்படவில்லை. இதனால் மழை பெய்யும்போது யாரேனும் இறந்துவிட்டார் உடலை இடுப்புக்கு மேல் உள்ள தண்ணீரில் தான் தூக்கி கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
விஜயகுமார், பெருவளப்பூர், திருச்சி.
குடிநீர் இன்றி தவிக்கும் பொதுமக்கள்
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மருதாண்டக்குறிச்சி சந்தோஷ்நகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளன. இந்த பகுதிக்கு திருச்சி மாநாகராட்சியால் குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கடந்த 15 நாட்களாக குடிநீர் குழாயில் தண்ணீர் வரவில்லை. இதனால் இப்பகுதியில் வாழும் மக்கள் மிகுந்த சிரமத்தில் வாழ்ந்து வருகின்றனர். குடிநீரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலைக்கு அனைத்து குடும்பங்களும் தள்ளப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்களின் துயரத்தை கருத்தில் கொண்டு மாநாகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் வாழும் மக்களுக்கு குடிநீர் குழாயில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
நவமணிவேல் , சந்தோஷ்நகர், திருச்சி.
தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் அந்த பகுதிகள் முழுவதும் மழைநீர் தேங்கி உள்ளன. மழை நீரோடு பாதாள சாக்கடை அடைத்து அதில் இருக்கும் கழிவு நீரும் வெளியே வருவதால் துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதியவர்களும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும், மோட்டார் சைக்கிளில் செல்பவர்களும் தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வெங்கடேஸ்வரா நகர், திருச்சி.
அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கரியமாணிக்கம் ஊராட்சியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். மேலும் ஊராட்சி பகுதியில் பல இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், மழை நீரும் தேங்கி பல இடங்களில் குட்டை போல் காட்சியளிக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கரியமாணிக்கம், திருச்சி.
Related Tags :
Next Story