முயல் கறி சமைத்து சாப்பிட்டவருக்கு அபராதம்


முயல் கறி சமைத்து சாப்பிட்டவருக்கு அபராதம்
x
தினத்தந்தி 15 Nov 2021 1:43 AM IST (Updated: 15 Nov 2021 1:43 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் அருகே முயல் கறி சமைத்து சாப்பிட்டவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கடையம்:

கடையம் வனச்சரகம் மத்தளம்பாறை பீட் அருகே உள்ள விளை நிலங்களில் சுருக்கு கம்பியை பயன்படுத்தி முயல்களை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அம்பை கோட்ட துணை இயக்குனர் செல்வி சண்முகப்பிரியா உத்தரவுப்படி, வனவர் முருகசாமி தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மேல மெஞ்ஞானபுரம் கிராமத்தை சேர்ந்த கடற்கரை மகன் மாடசாமி என்பவர், தன்னுடைய விளைநிலத்தில் காட்டு முயலை கொல்வதற்காக சுருக்கு கம்பி அமைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மோட்டார் அறையில் சோதனை செய்தபோது, முயல் கறி சமைத்து சாப்பிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு வனத்துறையினர் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Next Story