கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைத்த கிராம மக்கள்


கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைத்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 15 Nov 2021 1:57 AM IST (Updated: 15 Nov 2021 1:57 AM IST)
t-max-icont-min-icon

ராதாபுரம் அருகே கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை கிராம மக்கள் சீரமைத்தனர்.

வள்ளியூர்:

நெல்லை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பணகுடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் அனுமன் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதனால் ராதாபுரம் அருகே உள்ள கால்கரை குளம் நிரம்பி மறுகால் பாய்ந்து, பெத்தரங்கபுரம் குளத்துக்கு செல்கிறது. 

இந்த நிலையில் நேற்று மதியம் பெத்தரங்கபுரம் குளத்துக்கு செல்லும் கால்வாயின் கரையில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் கால்கரை கிராமத்துக்குள் புகுந்தது.
உடனே கால்கரை கிராம மக்கள், இளைஞர்கள் விரைந்து சென்று, கால்வாய் கரையில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க ஏற்பாடு செய்தனர். அதன்படி கால்வாய் கரையில் பொக்லைன் எந்திரம் மூலம் இரும்பு தகடுகள், மண்மூட்டைகளை அடுக்கி வைத்து சீரமைத்தனர்.

Next Story