அந்தியூர் அருகே கல்குவாரியை தடை செய்யக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
அந்தியூர் அருகே கல்குவாரியை தடை செய்யக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தியூர்
அந்தியூர் அருகே கல்குவாரியை தடை செய்யக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
அந்தியூரை அடுத்த வெள்ளித்திருப்பூர் அருகே கல்குவாரி ஒன்று உள்ளது. கற்களை பெயர்க்க இந்த குவாரியில் வெடி வைக்கும்போது அதில் இருந்து கற்கள் அருகே உள்ள கொமராயனூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் விழுவதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்குள்ள கூப்புக்காடு பிரிவு என்ற இடத்துக்கு நேற்று பகல் 11 மணி அளவில் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், வெள்ளித்திருப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘வெடி வைக்கும்போது கல்குவாரியில் இருந்து கற்கள் எங்களுடைய விவசாய நிலங்களில் தூக்கி வீசப்படுகிறது. எனவே கல்குவாரியை தடை செய்ய வேண்டும்,’ என்றனர். அதற்கு போலீசார் பதில் அளிக்கையில், ‘இதுகுறித்து எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மதியம் 12 மணி அளவில் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story