கந்தம்பாளையம் அருகே தொழிலாளி மீது தாக்குதல்; கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது


கந்தம்பாளையம் அருகே தொழிலாளி மீது தாக்குதல்; கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது
x
தினத்தந்தி 15 Nov 2021 10:46 AM IST (Updated: 15 Nov 2021 10:46 AM IST)
t-max-icont-min-icon

கந்தம்பாளையம் அருகே தொழிலாளி மீது தாக்குதல்; கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது

கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருகே உள்ள கருந்தேவம்பாளையத்தை சேர்ந்த அய்யாவு மகன் சங்கர் (வயது 30). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் கொன்னபாளையம் மாரியம்மன் கோவில் அருகே சென்றார். அப்போது அங்கு கந்தம்பாளையம் மேற்கு தெருவை சேர்ந்த காமராஜ் மகன் கல்லூரி மாணவரான பூவரசன் (20), மணியனூரை சேர்ந்த மாதேஸ்வரன் மகன் கல்லூரி மாணவர் சுகுமார் (19), மணியனூயரை சேர்ந்த சண்முகம் மகன் கல்லூரி மாணவர் கோகுலகிருஷ்ணன் (19), கொன்னபாளையத்தை சேர்ந்த ரவிக்குமார் மகன் கல்லூரி மாணவர் சந்தோஷ் (19) ஆகியோர் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சங்கருக்கும், கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் 4 பேரும் சேர்ந்து சங்கரை திட்டியதுடன் தாக்கி விட்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த சங்கரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை திட்டி தாக்கிய கல்லூரி மாணவர்கள் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story