ஸ்ரீவைகுண்டம் அருகே அரியநாயகிபுரம் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 350 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது

ஸ்ரீவைகுண்டம் அருகே அரியநாயகிபுரம் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 350 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது
x
தினத்தந்தி 15 Nov 2021 4:34 PM IST (Updated: 15 Nov 2021 4:34 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் அருகே அரியநாயகிபுரம் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 350 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது

ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அருகே அரியநாயகிபுரம் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 350 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ரேஷன் அரிசி பதுக்கல்
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தில் 50 ஏக்கரில் ஒரு தோட்டம் உள்ளது. இதில் பாழடைந்த வீடு தனியாக இருக்கிறது. இந்த வீட்டில் சுமார் 350 முட்டை ரேஷன் அரிசி இருப்பதாக ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அரியநாயகிபுரம் தோட்டத்தில் உள்ள வீட்டில் சோதனை நடத்தினர்.
பறிமுதல்
அப்போது திருட்டுத்தனமாக கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 350 மூட்டைகள் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். 
 கடத்தலுக்கு உடந்தையாக இருந்தவர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். திருட்டுத்தனமாக கேரளாவுக்கு கடத்த பதுக்கியது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட நுகர்பொருள் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story