தடுப்பணை உடைந்து வீணாகும் தண்ணீர்


தடுப்பணை உடைந்து வீணாகும் தண்ணீர்
x
தினத்தந்தி 15 Nov 2021 5:30 PM IST (Updated: 15 Nov 2021 5:30 PM IST)
t-max-icont-min-icon

உடுக்கம்பாளையம் பகுதியில் தடுப்பணை உடைந்து தண்ணீர் வீணாகிறது. எனவே தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தளி
உடுக்கம்பாளையம் பகுதியில் தடுப்பணை உடைந்து தண்ணீர் வீணாகிறது. எனவே தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
தடுப்பணைகள்
உடுமலை, தளி, அமராவதி சுற்றுவட்டார பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாகும்.சாகுபடி பணிகளுக்கு திருமூர்த்தி, அமராவதி அணைகள், கிணறு, ஆழ்குழாய்கிணறுகள், பருவமழை கை கொடுத்து வருகிறது. அதை ஆதாரமாக கொண்டு நீண்டகால பயிர்கள், காய்கறிகள், தானியங்கள், மானாவாரி சாகுபடி நடைபெற்று வருகிறது. மழைக்காலங்களில் ஏற்படுகின்ற நீர்வரத்து நீராதாரங்களில் தேங்குவதால் நிலத்தடி நீர்இருப்பும் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாய பணிகள் தடையில்லாமல் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது. ஆனாலும் வறட்சி காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகி விடுவதும் வாடிக்கையாக உள்ளது.
இந்த சூழலில் கடந்த இரண்டு வாரமாக உடுமலை சுற்றுப்புற பகுதியில் அவ்வப்போது சாரல் மற்றும் பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி வருவதுடன் நீராதாரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.அந்த வெள்ளம் நீர்வழித்தடங்கள் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் தேங்கி வழிந்த வண்ணம் உள்ளது. இதனால் சுற்றுப்பகுதியில் உள்ள கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுளுக்கு நிலத்தடி நீர்இருப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
உடைந்தது
இந்த நிலையில் உடுக்கம்பாளையம் பகுதியில் ஓடையின் குறுக்கே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட தடுப்பணை சேதமடைந்து உடைந்து விட்டது.இதன் காரணமாக தண்ணீர் தேங்குவதற்கு வழியில்லாமல் வீணாகி வருகிறது. இதனால் தடுப்பணை கட்டப்பட்டதற்கான நோக்கமும் பொதுமக்களின் வரிப்பணமும் தரமற்ற கட்டுமானத்தால் வீணடிக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது.எனவே அதிகாரிகள் உடுக்கம் பாளையம் பகுதியில் சேதமடைந்த தடுப்பணையை சீரமைப்பதற்கு முன்வருவதுடன் மற்ற தடுப்பணைகளின் உறுதித்தன்மையையும் ஆய்வு செய்ய வேண்டும்.இதனால் மழைநீர் முழுவதுமாக சேகரிக்கப்பட்டு நிலத்தடி நீர் இருப்பு உயர்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்று விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.


---------


Next Story