மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு


மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு
x
தினத்தந்தி 15 Nov 2021 6:43 PM IST (Updated: 15 Nov 2021 6:43 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமேசுவரம், 
ராமேசுவரம் ராமர்தீர்த்தம் எதிரே உள்ளது ராமர் கோவில். இந்த கோவில் அருகே நேற்று காலை இருசக்கர வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த நகர் காவல் நிலைய போலீசார் தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். தீ பிடித்து எரிந்த அந்த இரு சக்கர வாகனம் யாருக்கு சொந்தமானது, இரு சக்கர வாகனத்தை அங்கு நிறுத்தியது யார்?, யாரால் தீவைத்து வைக்கப்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தீப்பிடித்து எரிந்த இருசக்கர வாகனத்தை ராமநாதபுரம் கைரேகை தடய அறிவியல் நிபுணர்கள் நேரில் வந்து பார்வையிட்டு தடயங்களை சேகரித்து சென்றுள்ளனர்.

Next Story