பஸ் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை


பஸ் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 15 Nov 2021 7:25 PM IST (Updated: 15 Nov 2021 7:25 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் பஸ் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கோத்தகிரி

கோத்தகிரியில் பஸ் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

சளி மாதிரி சேகரிப்பு

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுகாதாரத்துறை சார்பில் தினமும் அரசு பஸ்களில் பயணம் செய்யும் பொதுமக்கள், சமவெளி பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோத்தகிரி அருகே அட்டவளை பஸ் நிறுத்தத்தில் அந்த வழியாக செல்லும் பஸ்களை நிறுத்தி, அதில் பயணம் செய்யும் பயணிகளிடம் இருந்து சளி மாதிரி சேகரித்து, கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஒரு நாளைக்கு 600 பேருக்கு...

இதேபோன்று குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் நீலகிரி மாவட்டத்திற்குள் வரும் வாகன ஓட்டிகள், பயணிகளுக்கும், கோடநாடு செல்லும் சாலையில் உள்ள எஸ்.கைகாட்டி பகுதியில் வாகனங்களில் வந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இது மட்டுமின்றி சுகாதாரத்துறையினர் வாகனங்கள் மூலம் பணிக்கு சென்று வீடு திரும்பும் தொழிலாளர்கள், முகக்கவசம் அணியாமல் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோத்தகிரி அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கோத்தகிரி பகுதியில் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 600 பேருக்கு மேல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story