திருவள்ளூர் நகராட்சியில் 10 இடங்களில் 8-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்


திருவள்ளூர் நகராட்சியில் 10 இடங்களில் 8-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 15 Nov 2021 9:44 PM IST (Updated: 15 Nov 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 10 இடங்களில் 8-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தமிழக அரசின் உத்தரவின்படியும், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தலின் பேரில், நேற்று திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூர் ரெயில் நிலையம், டோல்கேட் பகுதி, ராஜாஜிபுரம், காக்களூர் சாலை, பஸ் நிலையம், சி.வி. நாயுடு சாலை, ஜே.என்.சாலை என நகராட்சிக்குட்பட்ட 10 இடங்களில் 8-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த மாபெரும் தடுப்பூசி போடும் முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

தடுப்பூசி போடும் சிறப்பு முகாமில் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் நகராட்சி பணியாளர்கள், ஊழியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.


Next Story