அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் ஊழியர்கள் முற்றுகை போராட்டம்


அரக்கோணம்  நகராட்சி அலுவலகத்தில் ஊழியர்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 15 Nov 2021 10:19 PM IST (Updated: 15 Nov 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

நகராட்சி அலுவலகத்தில் ஊழியர்கள் முற்றுகை போராட்டம்

அரக்கோணம்

அரக்கோணம் நகராட்சியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்கள். இவர்கள் அனைவருக்கும் கடந்த அக்டோபர் மாதத்திற்கான சம்பளம் இது நாள் வரை வழங்கவில்லையென கூறப்படுகிறது. கடந்த 20 மாதங்களுக்கு மேலாக கொரோனா தொற்று காலம் மற்றும் தொடர் தடுப்பூசி மூகாம்கள் என விடுமுறையின்றி பணியாற்றி வரும் தங்களுக்கு நவம்பர் மாதம் 15 தேதியாகியும் அக்டோபர் மாத ஊதியம் வழங்காமல் மெத்தனமாக நகராட்சி நிர்வாகம் செயல்படுவதாக கூறி நேற்று காலை நகராட்சி அலுவலகம் முன்பு ஊழியர்கள் திடிரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 உடனே அங்கு வந்த நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஆசீர்வாதம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

 அப்போது இரண்டு நாட்களில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Next Story