தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 15 Nov 2021 11:04 PM IST (Updated: 15 Nov 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

நாகை, திருவாரூர், மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

வாய்க்கால் தூர்வாரப்படுமா?
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள சின்னம்மாள் நகரில் மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாமல் செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. இதனால் தண்ணீர் செல்ல தடையாக உள்ளது. இதனால் மழை தண்ணீர் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம் உளளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெய்சங்கர், மன்னார்குடி.
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
திருவாரூர் கமலாலய குளம் அருகில் பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், திருவாரூர்.

Next Story