விருத்தாசலத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் பழுது
பயணிகள் அவதி
விருத்தாசலம்,
சென்னையில் இருந்து மதியம் மதுரைக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. மாலை 4.40 மணியளவில் விருத்தாசலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நின்ற இந்த ரெயில் சில நிமிடங்களில் மீண்டும் மதுரை நோக்கி புறப்பட்டது. நாச்சியார்பேட்டை ரெயில்வே கேட் அருகே சென்றபோது திடீரென என்ஜின் பழுதானதால் நடுவழியில் ரெயில் நின்றது. இதுபற்றி அறிந்த விருத்தாசலம் ரெயில் நிலைய ஊழியர்கள் ஊழியர்கள் விரைந்து சென்று என்ஜின் பழுதை சரி செய்தனர். இதையடுத்து சுமார் 40 நிமிடம் தாமதமாக 5.20 மணியளவில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு மதுரை நோக்கி சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும், ரெயில்வே கேட் இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டதால், விருத்தாசலம்- எருமனூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story