குடியிருப்பு பகுதியில் மழைநீர் வடியாததால் நோய் பரவும் அபாயம்


குடியிருப்பு பகுதியில் மழைநீர் வடியாததால் நோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 15 Nov 2021 11:23 PM IST (Updated: 15 Nov 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

மழைநீர் வடியாததால் நோய் பரவும் அபாயம்

வேலூர்

வேலூர்- காட்பாடி செல்லும் சாலையில் தர்மராஜாகோவில் பின்புறம் லாலாகுண்டா என்ற பகுதி உள்ளது. இங்கு சுமார் 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் சென்று வர குறுகலான வழி மட்டுமே உள்ளது. இந்தநிலையில் தற்போது வேலூரில் பெய்து வரும் மழையின் காரணமாக இப்பகுதி முழுவதிலும் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.

 மழைநீர் வடிய வாய்ப்பில்லாத நிலை உள்ளதால் வீடுகளின் முன்பு தண்ணீர் தேங்கி உள்ளது. பொதுமக்கள் அனைவரும் தண்ணீரில் நடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தண்ணீர் பல நாட்களாக தேங்கி உள்ளதால் அங்கு கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. இதனால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் வடிந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story