அரக்கோணம் அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலி


அரக்கோணம் அருகே  ஏரியில் மூழ்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 15 Nov 2021 11:27 PM IST (Updated: 15 Nov 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

ஏரியில் மூழ்கி வாலிபர் பலி

அரக்கோணம்

அரக்கோணத்தை அடுத்த சித்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரனின் மகன் ஸ்ரீதர் (வயது 21), துரித உணவகம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அரக்கோணம் அசோக் நகரைச் சேர்ந்தவர் மதன்‌. நண்பர்களான இருவரும் நேற்று மதியம் மதுபானம் குடித்து விட்டு, போதையில் சித்தேரி பகுதியில் உள்ள ஒரு ஏரியில் குளிக்க சென்றனர். 

ஏரியில் இருவரும் குளித்துக் கொண்டிருந்தனர். அதில் ஸ்ரீதர் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி விட்டார். உடனே மதன், கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார். கிராம மக்கள் ஓடி வந்து ஏரியில் இறங்கி தேடி ஸ்ரீதரை பிணமாக மீட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த அரக்கோணம் தாலுகா போலீசார், ஸ்ரீதரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story