கரூர் பகுதியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது
கரூர் பகுதியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சர்ச் கார்னர் அருகே உள்ள ஒரு இடத்தில் கஞ்சா வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கு சிலர் கஞ்சா விற்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா விற்று கொண்டிருந்த கரூர் பெரிய குளத்துபாளையத்தை சேர்ந்த சதாம் உசேன் (வயது 26), தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த சிவசந்திரன் (39), மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த வீரபாண்டி (54), மதுரையை சேர்ந்த ஜெயமேரி (46) ஆகிய 4 பேரை சுற்றி வளைத்தனர். இதையடுத்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான 12 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story