பள்ளி மாணவிக்கு டாக்டர் பாலியல் தொல்லை; தனியார் மருத்துவமனை மேலாளர் கைது


பள்ளி மாணவிக்கு டாக்டர் பாலியல் தொல்லை; தனியார் மருத்துவமனை மேலாளர் கைது
x
தினத்தந்தி 16 Nov 2021 12:00 AM IST (Updated: 16 Nov 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவிக்கு டாக்டர் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தனியார் மருத்துவமனை மேலாளர் கைது செய்யப்பட்டார்.

கரூர்
கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் ஜி.சி. எலும்பு மூட்டு மருத்துவமனை உள்ளது. இங்கு கரூர் பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்த 38 வயது பெண் கேசியராக பணியாற்றி வந்தார். இவர் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகாரில், 11-ம் வகுப்பு படிக்கும் எனது 17 வயது மகளுக்கு தான் வேலை பார்த்த மருத்துவமனையின் டாக்டர் ரஜினிகாந்த் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியிருந்தார். அதன்அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், டாக்டர் ரஜினிகாந்த், மருத்துவமனையின் மேலாளர் சரவணன் மூலம் அந்த பெண்ணின் மகளான 11-ம் வகுப்பு மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து தனது அறையில் வைத்து பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர் ரஜினிகாந்த், மேலாளர் சரவணன் ஆகிய 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் கரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மருத்துவமனை மேலாளர் சரவணனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள டாக்டர் ரஜினிகாந்தை தேடி வருகின்றனர்.

Next Story