ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 4 பேர் கோர்ட்டில் சரண்


ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 4 பேர் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 16 Nov 2021 12:41 AM IST (Updated: 16 Nov 2021 12:41 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 4 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர்

அரிமளம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவருடைய மகன் பாலவிக்னேஷ் (வயது 21). ஆட்டோ டிரைவரான இவரை கடந்த 6-ந் தேதி சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த பாலவிக்னேஷ் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 10-ந் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் தொடர்புடைய அறந்தாங்கியை சேர்ந்த அப்துல் லத்தீப் (21), காரைக்குடியை சேர்ந்த அராபத் (25), பாலமுருகன் (23), பாண்டிசெல்வம் (21) ஆகிய 4 பேர்  அருப்புக்கோட்டை குற்றவியல் ேகார்ட்டில், நீதிபதி மணிமேகலா முன்பு சரண் அடைந்தனர். அவர்களை 7 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story