போலீஸ் நிலையம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
போலீஸ் நிலையம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மீன்சுருட்டி:
மீன்சுருட்டி அருகே உள்ள குண்டவெளி வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் செல்வகுமார் (வயது 35). இவர் வெல்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், இவரது மனைவி பிரியாவுக்கும்(28) கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரியா தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். மேலும் அவர் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் பதிவு செய்து இருப்பதாகவும், மனம் உடைந்த செல்வகுமார் தினமும் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு அவர் போலீஸ் நிலையம் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story