போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 16 Nov 2021 1:01 AM IST (Updated: 16 Nov 2021 1:01 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே ஊத்துமலையை அடுத்த பலபத்திரராமபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துச்சாமி (வயது 35). அந்த ஊரில் பொக்லைன் மற்றும் டிராக்டர் வைத்து தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை முத்துசாமி தனது காரில் ஊரில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது சங்கரன்கோவில் சாலையில் பள்ளி முடித்து விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த மாணவியை கண்ட முத்துசாமி, அந்த மாணவியை பஸ் நிறுத்தத்தில் இறக்கி விடுவதாக கூறி காரில் ஏற்றி உள்ளார். இந்நிலையில் முத்துசாமி மது போதையில் இருந்ததால், காட்டுப் பகுதியில் காரை நிறுத்திவிட்டு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட தொடங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாணவியை மீட்டனர். உடனே அங்கிருந்து தப்பியோட முயற்சித்த முத்துசாமியை அந்த பகுதி இளைஞர்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து ஊத்துமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் போலீசார் முத்துசாமியை கைது செய்து, ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் அங்கயற்கண்ணி, முத்துச்சாமியின் மீது போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார். 

Next Story