காப்பீடு செய்வதற்கு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்


காப்பீடு செய்வதற்கு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்
x
தினத்தந்தி 16 Nov 2021 1:18 AM IST (Updated: 16 Nov 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

காப்பீடு செய்வதற்கு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் விவசாய சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

விருதுநகர், 
காப்பீடு செய்வதற்கு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் விவசாய சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர். 
ஆர்ப்பாட்டம் 
தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் விஜய் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- 
தமிழகம் முழுவதும் கடும் உரம் தட்டுப்பாடு நிலவி வரும் நிலை நிலவுகிறது. மற்ற மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு உரம் கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு யூரியா உள்ளிட்ட உரங்கள் கிடைக்காத நிலை நீடிக்கிறது. மேலும் தனியார் உர நிறுவனங்களில் ஏதாவது மாற்று உரம் வாங்கினால் தான் தேவைப்படும் உரம் வழங்க முடியும் என நிர்ப்பந்தம் செய்யும் நிலையும் உள்ளது.
காப்பீட்டு தொகை 
 எனவே விவசாயிகளுக்கு முறையாக உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  2020- 2021-ம் ஆண்டிற்கான காப்பீட்டு தொகை நெல் தவிர இதர பயிர்களுக்கு கிடைக்காத நிலை உள்ளது. எனவே காப்பீட்டு தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 மேலும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டும் கிராம நிர்வாக அலுவலர்கள் விவசாயிகளுக்கு முழுமையாக பயிர் அடங்கல் வழங்க மறுக்கும் நிலை உள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் அவர்கள் காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே உடனடியாக பயிர் அடங்கல் வழங்கவும் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தரவும் வேண்டும்.
 இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Next Story