மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம்
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என எச்.ராஜா கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என எச்.ராஜா கூறினார்.
தொடர்மழை
ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு பின்னர் மணவாளமாமுனிகள் சன்னதியில் எச்.ராஜா, ஜீயரை சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
சென்னை மட்டுமின்றி டெல்டா மாவட்டங்கள், கடலூர், கன்னியாகுமரியில் பெய்த தொடர்மழையினால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
டெல்டா மாவட்டங்கள், கடலூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
தற்கொலை வழக்கு
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து எந்த ஒரு வேலையும் நடைபெறவில்லை. கோவிலில் தங்கம் எடுக்கின்ற வேலையை மட்டும் செய்தது. அது நீதிமன்ற உத்தரவுப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு செயல்பட ஆரம்பிக்க வேண்டும். கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் மட்டுமே தமிழ்நாட்டில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
ஜெய்பீம் படம் இரு சமுதாயத்தினருக்கு இடையே பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story