புற்றுநோய் பாதித்த மனைவியின் சாவுக்கு காரணம்: மருந்து கடைக்காரர் மீதுே போலீசில் பேராசிரியர் புகார்
புற்றுநோய் பாதித்த தனது மனைவியின் சாவுக்கு காரணம் என்று மருந்துகடைக்காரர் உள்பட 3 பேர் மீது போலீசில் கல்லூரி பேராசிரியர் புகார் அளித்து உள்ளார்.
பெங்களூரு: புற்றுநோய் பாதித்த தனது மனைவியின் சாவுக்கு காரணம் என்று மருந்துகடைக்காரர் உள்பட 3 பேர் மீது போலீசில் கல்லூரி பேராசிரியர் புகார் அளித்து உள்ளார்.
கல்லூரி பேராசிரியர்
பெங்களூரு ஜீவன்பீமாநகரில் 46 வயது கல்லூரி பேராசிரியர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் கல்லூரி பேராசிரியர் தனது மனைவியை பழைய விமான நிலைய சாலையில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக அனுமதித்து இருந்தார். அப்போது அவருக்கு சந்தோஷ் என்பவரின் பழக்கம் கிடைத்தது. அப்போது தனது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டது குறித்து சந்தோசிடம், பேராசிரியர் கூறி இருந்தார்.
அப்போது சந்தோஷ் தனது நண்பர் சங்கர் யாதவ் என்பவரின் மனைவியும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு கப்பன்பேட்டை மெயின் ரோட்டில் உள்ள மருந்தகத்தில் புற்றுநோய்க்கு மருந்து வாங்கி கொடுத்தோம். அவர் குணம் ஆகிவிட்டார் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் பேராசிரியருக்கு தொடர்பு கொண்டு பேசிய சங்கரும், சந்தோஷ் கூறியதை தெரிவித்து இருந்தார்.
மனைவி சாவுக்கு காரணம்
இதனை உண்மை என்று நம்பிய பேராசிரியர் கப்பன் சாலையில் உள்ள மருந்தகத்திற்கு சென்று புற்றுநோய்க்கு மருந்து வாங்கி மனைவிக்கு கொடுத்தார். மேலும் அந்த மருந்துகளை பெற ரூ.4 லட்சத்து 40 ஆயிரத்தை சங்கரின் வங்கிக்கணக்கில் செலுத்தி இருந்தார். ஆனால் அந்த மருந்தை பயன்படுத்திய சில நாட்களில் புற்றுநோய் தீவிரமாகி பேராசிரியர் மனைவி இறந்து விட்டார்.
இந்த நிலையில் போலியான புற்றுநோய் மருந்தை கொடுத்து தனது மனைவி சாவுக்கு சந்தோஷ், சங்கர், மருந்து கடையின் உரிமையாளர் ஆகியோர் காரணமாகி விட்டதாகவும், 3 பேரும் தன்னிடம் ரூ.4.40 லட்சத்தை மோசடி செய்து விட்டதாகவும் கூறி அல்சூர்கேட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அந்த புகாரின்பேரில் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story