பெற்றோர்கள் சொல்வதை கடைபிடித்து நடக்க வேண்டும். மாணவிகளுக்கு கலெக்டர் அறிவுரை


பெற்றோர்கள் சொல்வதை கடைபிடித்து நடக்க வேண்டும். மாணவிகளுக்கு கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 16 Nov 2021 9:25 AM IST (Updated: 16 Nov 2021 9:25 AM IST)
t-max-icont-min-icon

பெற்றோர்கள் சொல்வதை கடைபிடித்து நடக்கவேண்டும் என்று ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மாணவிகளுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

ராணிப்பேட்டை

பெற்றோர்கள் சொல்வதை கடைபிடித்து நடக்கவேண்டும் என்று ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மாணவிகளுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

குறைதீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை,  கூட்டுறவு கடன் உதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள், மின்சாரத் துறை சார்பான குறைகள், பொது பிரச்சினைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். 

மொத்தம் 271 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

பெற்றோர் சொல்வதை...

அதைத்தொடர்ந்து குழந்தைகள் தின விழாவையொட்டி மாணவிகளுக்கு அன்பு மடல் வழங்கியும், விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் சைல்டு லைன் எண் 1098 என்ற பலகையையும் கலெக்டர் வெளியிட்டார். மாணவிகள் சைல்டு லைன் பட்டையை கலெக்டருக்கு அணிவித்தனர்.

அப்போது மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-
நீங்கள் நன்றாக படிக்க வேண்டும். சிறு வயதில் கல்யாணம் செய்து கொள்வது தவறான செயல். எந்த ஒரு மனிதர்களின் வெளிப்புற தோற்றத்தையும் வைத்து குறைத்து மதிப்பிடக்கூடாது. அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அதனை மாணவிகள் தெரிந்துகொள்ள வேண்டும். நாம் மட்டும் முன்னேற வேண்டும் என நினைக்காமல் நம்மை சுற்றி உள்ளவர்களும் முன்னேற வேண்டும் என நினைக்க வேண்டும். அம்மா தான் முதல் நண்பன். பெற்றோர் என்ன சொல்கிறார்களோ அதை கடைபிடித்து நடக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, முதன்மை மேலாளர் செல்வக்குமார், குழந்தைகள் நல குழும தலைவர் சிவ கலைவாணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story