சிலிண்டர் வெடித்து குடிசை வீடு சாம்பலானது


சிலிண்டர் வெடித்து குடிசை வீடு சாம்பலானது
x
தினத்தந்தி 16 Nov 2021 9:25 AM IST (Updated: 16 Nov 2021 9:25 AM IST)
t-max-icont-min-icon

சிலிண்டர் வெடித்து குடிசை வீடு சாம்பலானது

போளூர்

போளூரை அடுத்த ஆத்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பச்சையம்மாள். விதவையான இவர் நேற்று மதியம் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக கியாஸ் சிலிண்டர் வெடித்தது. இதில் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து வீட்டில் இருந்த  அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சாம்பலாயின. அதிர்ஷ்ட வசமாக பச்சையம்மாள் உயிர் தப்பினார். வீட்டுக்குள் இருந்த அவரது உறவினர் மணிமாறனுக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டது. அவரை போளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

தகவல் அறிந்ததும் போளூர் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பச்சையம்மாள் வீட்டின் பின்புறம் வீடு கட்ட சேமித்து வைத்திருந்த பணம் மற்றும் ஆவணங்கள் தீயில் கருகியது. தாசில்தார் சண்முகம், மண்டல துணை தாசில்தார் சிவலிங்கம் சென்று பச்சையம்மாளுக்கு ஆறுதல் கூறி, அரசு நிவாரணமாக அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், வேட்டி, சேலைகள் வழங்கினர். மேலும் ரூ.5 ஆயிரம் அவரது வங்கி கணக்கில் வரவு வைத்தனர். வருவாய் ஆய்வாளர் அறிவழகன், கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story