தீபத் திருவிழாவுக்கு திருவண்ணாமலைக்கு செல்வதை தவிர்க்க போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்


தீபத் திருவிழாவுக்கு திருவண்ணாமலைக்கு செல்வதை தவிர்க்க போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 16 Nov 2021 9:25 AM IST (Updated: 16 Nov 2021 9:25 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தெரிவித்துள்ளதாவது:-

கொரோனா தொற்று காரணமாக இந்த வருடம் கார்த்திகை மாத பவுர்ணமி மற்றும் தீபத் திருவிழா நாளன்று பொதுமக்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குள் செல்லவும், கிரிவலம் சுற்றி வருவதற்கும் அனுமதி இல்லை எனவும், இந்தக் கட்டுப்பாடு வருகிற 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை அமல்படுத்தப்படும் என திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனவே மேற்படி நாட்களில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவிற்கு செல்வதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story