உள்ளாட்சி தேர்தல் குறித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்


உள்ளாட்சி தேர்தல் குறித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 16 Nov 2021 4:39 PM IST (Updated: 16 Nov 2021 4:39 PM IST)
t-max-icont-min-icon

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கூடிய விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான நடவடிக்கைகளை மாவட்ட தேர்தல் ஆணையம் தீவிரமாக எடுத்து வருகிறது.

அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரைவு வாக்காளர் பட்டியல், வரைவு வாக்குச்சாவடி பட்டியல் உள்ளிட்ட வகைகளை மாவட்ட தேர்தல் அதிகாரி அனைத்துக்கட்சி பிரதிநிதியினர் முன்னிலையில் வெளியிட்டார். இந்த இரு பட்டியலில் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் எனவும் மாவட்ட தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை இறுதி செய்வது குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் துணை கமிஷனர்கள் விஷூ மஹாகன், சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், எம்.சிவகுரு பிரபாகரன், மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார் சிட்டி பாபு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சியினர் தெரிவித்த கருத்துகளை, மாவட்ட தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி கேட்டுக்கொண்டார்.


Next Story