டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பிஇ, பிடெக் மாணவர்களுக்கு முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கவிழா நடந்தது
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பிஇ, பிடெக் மாணவர்களுக்கு முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கவிழா நடந்தது
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு பி.இ., பி.டெக். மற்றும் முதுகலை மேலாண்மை மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி கலையரங்கில் நடந்தது. கணிதத்துறை தலைவி வாசுகி வரவேற்று பேசினார்.
விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஞா.வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கி, கல்லூரியின் சிறப்பம்சங்களை விளக்கி பேசினார். அவர் கூறுகையில், “இக்கல்லூரி ஐ.எஸ்.ஓ. 9001:2015 என்.பி.ஏ. மற்றும் டாடா கன்சல்டன்சியின் தரச்சான்றிதழை பெற்றுள்ளது. கல்லூரி முழுவதும் இன்டர்நெட் மற்றும் வை-பை வசதி செய்து தரப்பட்டுள்ளது. படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன” என்றார்.
மேலாண்மைத்துறை தலைவர் அமிர்தகவுரி, சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினரும், கல்லூரியின் முன்னாள் மாணவரும், ஐகானியோ டெக்னாலஜிஸ்-ன் இயக்குனருமான எஸ்.ராஜசேகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், “கடின உழைப்பு மற்றும் ஈடுபாடுடைய முயற்சியே ஒருவரின் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு பெரிதும் பயன்படும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கல்வி கற்க ஊக்குவிக்க வேண்டும்” என்றார்.
விழாவில் கல்லூரி செயலாளர் எஸ்.நாராயணராஜன் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், “வாழ்க்கையில் வெற்றி பெற கருத்து உருவாக்கும் திறமை, மற்றவர்களோடு பழகும் திறமை, தொழில்நுட்ப திறமை, மேலாண்மை திறமை மற்றும் அரசியல் திறமை ஆகிய 5 திறமைகளை படிக்கும்போதே வளர்த்துக்கொள்ள வேண்டும்” என்றார். வேதியியல் துறை தலைவி டி.ஜோதி ஸ்டெல்லா நன்றி கூறினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story