மாணவர்களுடன் அமைச்சர் கலந்துரையாடல்


மாணவர்களுடன் அமைச்சர் கலந்துரையாடல்
x
தினத்தந்தி 16 Nov 2021 5:25 PM IST (Updated: 16 Nov 2021 5:25 PM IST)
t-max-icont-min-icon

மாணவர்களுடன் அமைச்சர் கலந்துரையாடல்

உடுமலை,
உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகரில் சைனிக் பள்ளி ராணுவ பயிற்சி பள்ளி உள்ளது. மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் ராணுவத்தின் முப்படைகளிலும் உயர் அதிகாரிகளாகவும், மத்திய மாநில அரசு துறைகளில் உயர் அதிகாரிகளாகவும் உள்ளனர்.
இந்தபள்ளிக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி வந்திருந்தார். அவருடன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், பொள்ளாச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரமேஷ், உடுமலைஆர். டி.ஓ.கீதா, மடத்துக்குளம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.  ஆர்.ஜெராமகிருஷ்ணன் ஆகியோரும் வந்திருந்தனர்.
அமைச்சர்கள் பள்ளியின் ஒவ்வொரு பகுதியாக சென்று பார்வையிட்டனர். அப்போது பள்ளியின் செயல்பாடுகள் குறித்து பள்ளியின் முதல்வரான விமானப்படை அதிகாரி கேப்டன் நிர்மல் ரகு எடுத்துரைத்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
-

Next Story