மாவட்ட செய்திகள்

படப்பை அருகே தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் கைது + "||" + Robbery arrested for serial robbery near Padappai

படப்பை அருகே தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் கைது

படப்பை அருகே தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
படப்பை அருகே 1½ ஆண்டுகளாக 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பலே கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
தொடர் கொள்ளை

படப்பை அருகே உள்ள மாடம்பாக்கம் ஆதனூர், குத்தனூர் ஆகிய பகுதிளில் பூட்டியிருக்கும் வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவம் நடைபெறறது. இதுகுறித்து மணிமங்கலம் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. புகாரின் பேரில் மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையனை பிடிக்க முடியாமல் தொடர்ந்து போலீசார் திணறி வந்தனர்.

ரோந்து பணி

இந்நிலையில் ஆதனூர் பகுதியில் மணிமங்கலம் போலீசார் கடந்த 13-ந் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த ஒரு நபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் மணிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர் தூத்துக்குடி மாவட்டம் நைனார்பாத் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (வயது 45) என்பதும், இவர் செங்கல்பட்டு மாவட்டம் மலையடி வேம்பாக்கம் பகுதியில் தன் குடும்பத்துடன் தங்கி மாமண்டூரில் பழைய இரும்பு கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது.

திடுக்கிடும் தகவல்

மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. வியாபாரத்தில் தொடர் நஷ்டம் ஏற்பட்டதாகவும், இதனால் வீட்டில் உள்ளவர்களிடம் வேலைக்கு செல்வதாக சொல்லிவிட்டு பஸ்சில் தனி ஆளாக சென்று ஆதனூர், மாடம்பாக்கம், குத்தனூர் ஆகிய பகுதிகளில் பூட்டிய வீடுகளை பகலில் நோட்டமிட்டு, ஆயுதங்களைக் கொண்டு கதவை உடைத்து உள்ளே சென்று கொள்ளை சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டது தெரியவந்தது.

அவர் ஒன்றரை ஆண்டுகளாக 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து முருகேசனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து சுமார் 50 பவுன் நகை மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பட்டப்பகலில் துணிகரம்: தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளை
திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள், தடுக்க முயன்றவர்களை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
2. அமெரிக்காவில் சரக்கு ரெயில்களில் கொள்ளை..!
அமெரிக்காவில் சரக்கு ரெயில்களில் கொள்ளையடிக்கப்படுவதாக யூனியன் பசிபிக் ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
3. படப்பை அருகே ரூ.9 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
படப்பை அருகே ரூ.9 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது. கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. பறக்கும் ரெயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் ரூ.1¼ லட்சம் கொள்ளை
சென்னை திருவான்மியூர் ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டரில் ஊழியரிடம் துப்பாக்கி முனையில் ரூ.1¼ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. ரெயில்வே போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
5. அரக்கோணம் அருகே துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளையடித்த சம்பவம்: 6 பேரிடம் விசாரணை
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.