சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்
சாலையின் அவலத்தை அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில், துர்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த சில பெண்கள், தெருவில் இருந்த சேற்றில் இறங்கி நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்திரமேரூர் பேரூராட்சி, 17-வது வார்டு துர்க்கை அம்மன் கோவில் முதல் தெருவில் வடகிழக்கு பருவமழையால் சாலை முழுவதும் சேதமாகி சேறும், சகதியுமாக காட்சி அளித்தது. இதனால் இரண்டு சக்கர வாகனம் மற்றும் நடந்து செல்வதற்கு கூட லாயக்கற்ற மோசமான சாலையாக இருந்தது.
இதனால், மோசமான சாலையின் அவலத்தை அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில், துர்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த சில பெண்கள், தெருவில் இருந்த சேற்றில் இறங்கி நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சாலையை சீரமைக்கவும், வடிகால்வாய் வசதி வேண்டியும் உத்திரமேரூர் பேரூராட்சியில் கோரிக்கை மனு அளித்தனர்.
Related Tags :
Next Story