கும்மிடிப்பூண்டி அருகே மீனவ கிராமத்தில் தொகுப்பு வீடுகளை கலெக்டர் ஆய்வு


கும்மிடிப்பூண்டி அருகே மீனவ கிராமத்தில் தொகுப்பு வீடுகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 16 Nov 2021 7:02 PM IST (Updated: 16 Nov 2021 7:02 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே மீனவ கிராமத்தில் தொகுப்பு வீடுகளை கலெக்டர் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியகுப்பம் கிராமத்தில் வடகிழக்கு பருவமழையால் சேதம் அடைந்த படகு தளப்பகுதியை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.ரவி, ஒன்றிய கவுன்சிலர் உஷா, ஒன்றியக்குழுத்தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், துணைத்தவைவர் மாலதி குணசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த ஆய்வின்போது, அப்பகுதியில் இடிந்து விழும் நிலையில் காணப்பட்ட மீனவ மக்களின் தொகுப்பு வீடுகளுக்குள் திடீரென நுழைந்து ஆய்வு செய்தார். 1990-ம் ஆண்டு வழங்கப்பட்ட இத்தகைய 100-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள், கடந்த 30 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும் புதிய வீடுகளை மாவட்ட நிர்வாகம் வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.


Next Story